“ரஜினி திரையுலகின் சூப்பர் ஸ்டார்; நான் அரசியலில் சூப்பர் ஸ்டார்” - சீமான்
ஒருமுறை தான் நானும் அவரும் ஒன்றாக நின்றோம். ஐயோ ஐயோ என்று குதிக்கிறார்கள். ஏன் தெரியுமா? காரணம் அவர் திரையுலகின் சூப்பர்ஸ்டார், நான் அரசியலில் சூப்பர்ஸ்டார்.
சென்னை: ஒருமுறை தான் நானும் அவரும் ஒன்றாக நின்றோம். ஐயோ ஐயோ என்று குதிக்கிறார்கள். ஏன் தெரியுமா? காரணம் ரஜினி திரையுலகின் சூப்பர் ஸ்டார், நான் அரசியலில் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டாரும் சந்தித்த உடன் பயந்து விட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் புதன்கிழமை (நவ.27) சீமான் பேசியதாவது: “நானும் ஐயா ரஜினிகாந்தும் இரண்டே கால் மணி நேரம் என்ன பேசினோம் என்பது எங்களுக்குதான் தெரியும். அதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை, அவருக்கும் இல்லை. உங்கள் வீட்டில் காதுகுத்து, கல்யாணம், புத்தகம் வெளியீடு என அனைத்துக்கும் அவரை கூப்பிட்டு கூட வைத்துக் கொள்கிறீர்கள். ஆனால் ஒருமுறை தான் நானும் அவரும் ஒன்றாக நின்றோம். ஐயோ ஐயோ என்று குதிக்கிறார்கள். ஏன் தெரியுமா? காரணம் அவர் திரையுலகின் சூப்பர் ஸ்டார், நான் அரசியலில் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டாரும் சந்தித்த உடன் பயந்து விட்டார்கள்.