காரைக்கால் மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால், தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை யினர் நேற்று (டிச.2) இரவு கைது செய்தனர்
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால், தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று (டிச.2) இரவு கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த பால்மணி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், பால்மணியின் சகோதரர் கலைமணி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த மோகன்குமார், சுதின், மாணிக்கவேல், ஆகாஷ், ராமன், செல்வநாதன், தமிழ்க்கலை, சக்திவேல், வினித்குமார், பொன்னையன், கமலேஷ், சிவக்குமார், பூவரசன், ஆறுமுகம், ரத்தினவேல், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நிரஞ்சன், சிலம்பரசன் ஆகிய 18 மீனவர்கள் கடந்த 1ம் தேதி இரவு 8 மணியளவில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.