திரை விமர்சனம்: மிஸ் யூ
சினிமாவில் இயக்குநர் ஆவதற்கான முயற்சியில் இருக்கும் வாசுவை (சித்தார்த்), அரசியல்வாதி சிங்கராயரின் (சரத் லோகித்சவா) ஆட்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
சினிமாவில் இயக்குநர் ஆவதற்கான முயற்சியில் இருக்கும் வாசுவை (சித்தார்த்), அரசியல்வாதி சிங்கராயரின் (சரத் லோகித்சவா) ஆட்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் வெளியூர் செல்ல நினைக்கும் அவருக்கு வழியில் அறிமுகமாகிறார், பெங்களூரில் காபி ஷாப் வைத்திருக்கும் பாபி (கருணாகரன்), அவருடன் பெங்களூரு செல்கிறார்.
அங்கே நாயகி சுப்புலட்சுமியை (ஆஷிகா ரங்கநாத்) கண்டதும் காதல் வருகிறது வாசுவுக்கு. திருமணம் செய்துகொள்ளலாமா? என்று கேட்க, மறுக்கிறார் அவர். ஒருவேளை பெற்றோர் பேசினால் சரியாக இருக்கும் என நினைத்து, வீட்டில் பெண்ணின் புகைப்படத்தைக் காட்டுகிறார் வாசு, அதிர்ச்சி அடையும் அவர்கள் அந்த பெண், வேண்டவே வேண்டாம் என்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? அரசியல்வாதியின் ஆட்கள் ஏன் வாசுவைத் தேடுகிறார்கள் என்பது மீதி கதை.