தென்காசி மாவட்டத்தில் 3-வது நாளாக மழை நீடிப்பு: கடனாநதி அணையில் 260 மி.மீ. பதிவு

தென்காசி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக இன்றும் (டிச.14) பரவலாக மழை நீடித்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கடனாநதி அணையில் 260 மி.மீ. மழை பதிவானது.

தென்காசி மாவட்டத்தில் 3-வது நாளாக மழை நீடிப்பு: கடனாநதி அணையில் 260 மி.மீ. பதிவு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக இன்றும் (டிச.14) பரவலாக மழை நீடித்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கடனாநதி அணையில் 260 மி.மீ. மழை பதிவானது.

3வது நாளாக தொடரும் கனமழை: தென்காசி மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை காலை 5 மணியில் இருந்து தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 10 மணி வரை தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், அதன் பின்னர் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடனாநதி அணையில் 260 மி.மீ. மழை பதிவானது. ராமநதி அணையில் 154 மி.மீ., செங்கோட்டையில் 140 மி.மீ., குண்டாறு அணையில் 138 மி.மீ., கருப்பாநதி அணையில் 90 மி.மீ., தென்காசியில் 58 மி.மீ., ஆய்க்குடியில் 55 மி.மீ., சிவகிரியில் 53 மி.மீ., அடவிநயினார் அணையில் 38 மி.மீ., சங்கரன்கோவிலில் 22 மி.மீ. மழை பதிவானது.