மகளிர் நல திட்​டங்களை அறிய அரசின் உதவி எண் அறிவிப்பு

மகளிர் வாழ்​வாதார நலத்​திட்​டங்களை தெரிந்​து ​கொள்​வதற்கான உதவி எண்ணை, தமிழக அரசு அறிவித்​துள்ளது.

மகளிர் நல திட்​டங்களை அறிய அரசின் உதவி எண் அறிவிப்பு

சென்னை: மகளிர் வாழ்​வாதார நலத்​திட்​டங்களை தெரிந்​து ​கொள்​வதற்கான உதவி எண்ணை, தமிழக அரசு அறிவித்​துள்ளது.

தமிழக அரசின் சார்​பில் தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனத்​தின்​கீழ் தமிழ்​நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்​வாதார இயக்​ககங்கள் மற்றும் வாழ்ந்து காட்டு​வோம் திட்டம் மூலம் பல்வேறு நலத்​திட்​டங்கள் மகளிருக்காக செயல்​படுத்​தப்​பட்டு வருகின்றன. அதில் பால்வள மையம், மாதவிடாய் சுகாதார மேலாண்மை மன்றங்கள், அறிவுசார் மையங்கள் மூலம் அளிக்​கப்​படும் பயிற்சிகள், சமுதாய பண்ணைப் பள்ளி​கள், சமுதாய திறன் பள்ளிகள் மூலம் வழங்​கப்​படும் பயிற்சிகள் குறிப்​பிடத்​தக்கவை.