‘நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சிக்காக 95,000 ஹெக்டேர் காடுகள் அழிப்பு’
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 4-ம் தேதி உலக கானுயிர்கள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கேர்பெட்டா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
கோத்தகிரி: நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சிக்காக 95 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக, கானுயிர்கள் பாதுகாப்பு தின கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 4-ம் தேதி உலக கானுயிர்கள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கேர்பெட்டா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. தலைமை ஆசிரியை சரோஜா தலைமை வகித்தார். ஆசிரியர் ராஜ்குமார் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினரான தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளரும், லாங்வுட் சோலை பாதுகாப்பு குழுவின் செயலாளருமான கே.கே.ராஜூ பேசும்போது, "மனித குலம் தோன்றிய நாளில் இருந்து வன விலங்குகளை அழிப்பதே, வாழ்க்கை முறையாக இருந்து வந்துள்ளது. தற்போது, உலகில் உள்ள உயிரினங்களில் 10 சதவீதம் மட்டுமே வன விலங்குகள். மனிதர்களால் தங்கள் தேவைக்காக வளர்க்கப்பட்ட ஆடு, மாடு உள்ளிட்ட வளர்ப்பு உயிரினங்கள் 70% உள்ளன.