பாலியல் தொல்லை: கல்வியியல் பல்கலை. முன்னாள் பதிவாளரை இதுவரை கைது செய்​யாதது ஏன்? - ஐகோர்ட் கேள்வி

மதுரை​யில் கல்வி​யியல் கல்லூரி பெண் முதல்​வருக்கு பாலியல் தொல்லை அளித்த கல்வி​யியல் பல்கலைக்கழக முன்​னாள் பதிவாளரின் முன்​ஜாமீன் மனு தள்ளுபடி செய்​யப்​பட்டும், இன்னும் அவரைக் கைது செய்​யாதது ஏன்? என உயர் நீதி​மன்றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது.

பாலியல் தொல்லை: கல்வியியல் பல்கலை. முன்னாள் பதிவாளரை இதுவரை கைது செய்​யாதது ஏன்? - ஐகோர்ட் கேள்வி

மதுரை: மதுரை​யில் கல்வி​யியல் கல்லூரி பெண் முதல்​வருக்கு பாலியல் தொல்லை அளித்த கல்வி​யியல் பல்கலைக்கழக முன்​னாள் பதிவாளரின் முன்​ஜாமீன் மனு தள்ளுபடி செய்​யப்​பட்டும், இன்னும் அவரைக் கைது செய்​யாதது ஏன்? என உயர் நீதி​மன்றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது.

மதுரையைச் சேர்ந்த பெண் பேராசிரியர், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனுவில் கூறி​யிருப்​ப​தாவது: மதுரை​யில் உள்ள தனியார் கல்வி​யியல் கல்லூரி​யில் முதல்​வ​ராகப் பணியாற்றி வருகிறேன். எங்கள் கல்லூரி தமிழ்​நாடு கல்வி​யியல் பல்கலைக்​கழகத்​தின் ஆளுகைக்கு உட்பட்​டது. கல்வி​யியல் பல்கலை. பதிவாளராக ராமகிருஷ்ணன் பொறுப்​பேற்​றார். அவரை வாழ்த்து​வதற்காக சென்னை சென்​ற​போது புகைப்​படம் எடுத்​துக் கொண்​டோம். 2 நாட்கள் கழித்து என்னிடம் பேசிய பதிவாளர், தன்னுடன் நெருங்கி பழகினால் சிண்​டிகேட்​டில் பதவி பெற்றுத் தருவதாக தெரி​வித்​தார்.