ஃபெஞ்சல் புயல் அப்டேட்: இரு தினங்களுக்கு எங்கெல்லாம் ரெட் அலர்ட்?
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் எதிரொலியாக, தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு இன்றும் (சனிக்கிழமை) நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இவ்விரு நாட்களிலுமே புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் எதிரொலியாக, தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு இன்றும் (சனிக்கிழமை) நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இவ்விரு நாட்களிலுமே புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஃபெஞ்சல் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.30) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் புயலாக, புதுவையிலிருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.