‘பாஸ்’ என்கிற ‘லக்கி பாஸ்கர்!’

வெள்ளித்திரையில் பார்த்தவர்களுக்கு படம் பிடிப்பதும் ஓடிடி ரசிகர்களுக்கு பிடிக்காமல் போவதும், பெரிய திரையில் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று ஓடிடி ரசிகர்களால் கொண்டாடப்படுவதும் தொடர் கதையாகிவிட்டது.

‘பாஸ்’ என்கிற ‘லக்கி பாஸ்கர்!’

சமீப காலமாக திரையரங்கில் வெளியாகி ஒரு படம் வரவேற்பைப் பெறுகிறதோ இல்லையோ ஓடிடி-யில் அப்படம் மறு பிரவேசம் எடுப்பது வழக்கமாகிவிட்டது. வெள்ளித்திரையில் பார்த்தவர்களுக்கு படம் பிடிப்பதும் ஓடிடி ரசிகர்களுக்கு பிடிக்காமல் போவதும், பெரிய திரையில் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று ஓடிடி ரசிகர்களால் கொண்டாடப்படுவதும் தொடர் கதையாகிவிட்டது.

துல்கர் சல்மான் நடிப்பில் அண்மையில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் திரையரங்கில் சக்கைப்போடுபோட்டு ஓடிடி-யிலும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தின் கதையில் சாதாரண வங்கிப் பணியாளரான பாஸ்கர் தனது சாமார்த்தியத்தால் கோடீஸ்வரர் ஆகிறார். இந்த ‘பாஸ்கர்’ கதாப்பாத்திரத்தோடு ஆர்யா நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ (2010 ரிலீஸ்) கதாப்பாத்திரத்தை ஒப்பிட்டு மீம்களை தெறிக்கவிட்டனர் நெட்டிசன்கள்.