‘கூலி’, ‘ஜெயிலர் 2’ - ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு 2 சிறப்பு அறிவிப்புகள் 

டிசம்பர் 12-ம் தேதி ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக ‘கூலி’ மற்றும் ‘ஜெயிலர் 2’ குறித்த அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.

‘கூலி’, ‘ஜெயிலர் 2’ - ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு 2 சிறப்பு அறிவிப்புகள் 

சென்னை: டிசம்பர் 12-ம் தேதி ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக ‘கூலி’ மற்றும் ‘ஜெயிலர் 2’ குறித்த அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.

டிசம்பர் 12-ம் தேதி ரஜினியின் பிறந்தநாள். அன்றைய தினம் ரஜினி படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாவது வழக்கம். இந்தாண்டு அதே நாளில் ரஜினியின் 2 படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. ‘கூலி’ படத்தின் டீசர் மற்றும் ‘ஜெயிலர் 2’ குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இரண்டுமே அன்றைய தினம் வெளியாகிறது. ‘கூலி’ படத்தின் டீசரை வெளியிட படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள்.