பிச்சாட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 2,500 கன அடியாக அதிகரிப்பு
பிச்சாட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்: பிச்சாட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம்- நகரி அருகே உருவாகும் ஆரணி ஆற்றின் குறுக்கே ஆந்திர பகுதியில் உள்ளது பிச்சாட்டூர் அணை. திருவள்ளூர் மாவட்டம்- ஊத்துக்கோட்டையிலிருந்து, சுமார் 16 கி.மீ., தொலைவில் உள்ள இந்த அணைக்கு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது.