கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டிருப்பதற்கு ராமதாஸ் வரவேற்பு
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 66 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 66 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் நச்சு சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கள்ளச்சாராய சாவுகளின் பின்னணியை வெளிக்கொண்டு வரும் நோக்குடன் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இதுவாகும்.