“பிற வழிபாடுகளை இகழ்ந்து பேசுவது சனாதனத்தில் இல்லை” - ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

“பிற வழிபாடுகளை இகழ்ந்து பேசுவது சனாதனத்தில் இல்லை. சனாதனம் என்பது சமத்துவம்” என்று குமரியில் நடைபெற்ற அகிலத்திரட்டு உதயதின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

“பிற வழிபாடுகளை இகழ்ந்து பேசுவது சனாதனத்தில் இல்லை” - ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

நாகர்கோவில்: “பிற வழிபாடுகளை இகழ்ந்து பேசுவது சனாதனத்தில் இல்லை. சனாதனம் என்பது சமத்துவம்” என்று குமரியில் நடைபெற்ற அகிலத் திரட்டு உதயதின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைக்குளம் வைகுண்டசாமி பதியில் இன்று அய்யா வைகுண்ட சுவாமி மக்களுக்கு அருளிய அகிலத் திரட்டு அம்மன் உதய தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அவர் அய்யா வைகுண்டரின் அகிலத் திரட்டு ஆராய்ச்சி மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 108 பதிகள், தாங்கல் ஆகியவற்றில் புனித நீர், மற்றும் திருநாமத்தினை பெற்ற அவற்றை அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பி வைக்கும் நிகச்சியையும் தொடங்கி வைத்தார்.