புஷ்பா 2 Review: பாதியில் அணைந்து போன ‘ஃபயர்’!
2021-ல் வெளியாகி நாடு முழுவதும் பேசப்பட்ட படம் ‘புஷ்பா’. அல்லு அர்ஜுனின் மேனரிசம், சமந்தா தோன்றிய ‘ஊ சொல்றியா’ பாடல், செம்மர கடத்தல் பின்னணி, வில்லனாக ஃபஹத் ஃபாசில் என முதல் பாகத்தின் வெற்றிக்கு பல்வேறு காரணிகள் அடித்தளமாக அமைந்தன.
2021-ல் வெளியாகி நாடு முழுவதும் பேசப்பட்ட படம் ‘புஷ்பா’. அல்லு அர்ஜுனின் மேனரிசம், சமந்தா தோன்றிய ‘ஊ சொல்றியா’ பாடல், செம்மர கடத்தல் பின்னணி, வில்லனாக ஃபஹத் ஃபாசில் என முதல் பாகத்தின் வெற்றிக்கு பல்வேறு காரணிகள் அடித்தளமாக அமைந்தன. தற்போது 3 ஆண்டுகள் கழித்து, முதல் பாகத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்த அம்சங்கள் ஆங்காங்கே தூவப்பட்டு ‘Pushpa 2 The Rule’ ஆக வெளியாகியுள்ளது ‘புஷ்பா 2’.
முதல் பாகம் முடிந்த இடத்தில் இருந்தே இரண்டாம் பாகம் தொடங்குகிறது. தனது தொழில் எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டி செம்மரக் கடத்தலில் தனிக்காட்டு ராஜாவாக திகழ்கிறார் புஷ்பராஜ் (அல்லு அர்ஜுன்). அவரது மனைவியாக ஸ்ரீவள்ளி (ராஷ்மிகா). அதேவேளையில், புஷ்பாவால் தனக்கு நேர்ந்த அவமானத்தை தாங்கமுடியாமல் பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறார் போலீஸ் அதிகாரி ஷெகாவத் (ஃபஹத் ஃபாசில்). ஆந்திர முதல்வரை சந்திக்க செல்லும் புஷ்பாவை, முதல்வருடன் ஒரு போட்டோ எடுத்து வரச் சொல்கிறார் ஸ்ரீவள்ளி. ஆனால் தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்பும் புஷ்பா ஒரு கடத்தல்காரன் என்பதால் முதல்வர் (ஆடுகளம் நரேன்) மறுப்பு தெரிவிக்கின்றார். இதனால் கோபமடையும் புஷ்பா, தன்னுடைய நெருங்கிய நட்பில் இருக்கும் எம்.பி சித்தப்பாவை (ரமேஷ் ராவ்) முதல்வர் ஆக்குவதாக சபதம் ஏற்கிறார். அதன் பிறகு என்னவானது? புஷ்பாவின் சபதம் நிறைவேறியதா? ஷெகாவத்துக்கும் புஷ்பாவுக்கும் இடையிலான பகை தீர்ந்ததா என்பதே திரைக்கதை.