பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும்: அமைச்சர் கீதா ஜீவன் வேண்டுகோள்

பணியிடங்களில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும்: அமைச்சர் கீதா ஜீவன் வேண்டுகோள்

சென்னை: பணியிடங்களில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

சமூகநலத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை தொடர்பான பயிலரங்கம் சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடந்தது.