பொன்முடிக்கு எதிராக ஏன் இத்தனை பொல்லாப்பு? - சேறு வீசிய விவகாரத்தின் பின்னணி
அரசியல் செய்வதற்காக எனக்குப் பின்புறம் சேற்றை வீசி அடித்துள்ளனர். இது குறித்து சமூகவலைதளத்தில் யார் பதிவிட்டாரோ அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே இந்தக் காரியத்தைச் செய்துள்ளனர்.
விழுப்புரம் அருகேயுள்ள இருவேல்பட்டு கிராமத்தில் கடந்த 3-ம் தேதி புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சென்ற அமைச்சர் பொன்முடி மற்றும் விழுப்புரம் ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் மீது ஒரு பெண் உட்பட இருவர் சேற்றை வாரி வீசியது பெரும் சர்ச்சையானது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி “அரசியல் செய்வதற்காக எனக்குப் பின்புறம் சேற்றை வீசி அடித்துள்ளனர். இது குறித்து சமூகவலைதளத்தில் யார் பதிவிட்டாரோ அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே இந்தக் காரியத்தைச் செய்துள்ளனர். எனினும் நாங்கள் இதனைப் பெரிதுபடுத்தி அரசியலாக்க விரும்பவில்லை” என்று சாந்தமாகச் சொன்னார். பொன்முடி அப்படி சுட்டிக்காட்டியது பாஜகவினரைத்தான்.