மகனுடன் சொத்துப் பிரச்சினை: பத்திரிகையாளர்களை அடித்து விரட்டிய நடிகர் மோகன் பாபு
நடிகர் மோகன் பாபுவுக்கும் அவரது மகன் மனோஜ் மன்சுவுக்கு இடையிலான சொத்து பிரச்சினை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை மோகன் பாபு விரட்டி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: நடிகர் மோகன் பாபுவுக்கும் அவரது மகன் மனோஜ் மன்சுவுக்கு இடையிலான சொத்து பிரச்சினை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை மோகன் பாபு விரட்டி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுக்கு, விஷ்ணு மன்சு, மனோஜ் மன்சு என்ற 2 மகன்களும் லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர். இவர்களும் சினிமாவில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் சொத்து பிரச்சினை காரணமாக மனோஜ் தன்னைத் தாக்கியதாக ஹைதராபாத் பஹாடி ஷெரிஃப் போலீஸில் மோகன்பாபு நேற்று (டிச.09) புகார் அளித்தார். பவுன்சர்களுடன் தனது வீட்டில் மனோஜ் அத்துமீறி நுழைய முயல்வதாகவும் மோகன் பாபு அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.