மகளிர் நல திட்டங்களை அறிய அரசின் உதவி எண் அறிவிப்பு
மகளிர் வாழ்வாதார நலத்திட்டங்களை தெரிந்து கொள்வதற்கான உதவி எண்ணை, தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: மகளிர் வாழ்வாதார நலத்திட்டங்களை தெரிந்து கொள்வதற்கான உதவி எண்ணை, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின்கீழ் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்ககங்கள் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் மகளிருக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் பால்வள மையம், மாதவிடாய் சுகாதார மேலாண்மை மன்றங்கள், அறிவுசார் மையங்கள் மூலம் அளிக்கப்படும் பயிற்சிகள், சமுதாய பண்ணைப் பள்ளிகள், சமுதாய திறன் பள்ளிகள் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் குறிப்பிடத்தக்கவை.