அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் பதவிக்காலம் 2027 வரை நீட்டிப்பு: மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு

அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் ஜாபர் சாதிக் ஆகியோருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்குகளில் அமலாக்கத் துறை தரப்பில் ஆஜராகி வரும் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷின் பதவிக்காலத்தை வரும் 2027 மார்ச் வரை நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் பதவிக்காலம் 2027 வரை நீட்டிப்பு: மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் ஜாபர் சாதிக் ஆகியோருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்குகளில் அமலாக்கத் துறை தரப்பில் ஆஜராகி வரும் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷின் பதவிக்காலத்தை வரும் 2027 மார்ச் வரை நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்தனர். அந்த வழக்குகளின் அடிப்படையில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதியன்று கைது செய்தனர்.