மதுரை | விசிக கொடிக்கம்பம் அருகே கூடுதல் கட்டிடம்: வருவாய்த் துறை நோட்டீஸை கண்டித்து தர்ணா
அலங்காநல்லூர் அருகே ஆதனூரில் விசிக கொடிக்கம்பம் அருகே கூடுதல் கட்டிடம் கட்டக்கூடாது என்ற வருவாய்த் துறை நோட்டீஸை கண்டித்து அக்கட்சியினர் போராட்டம் செய்தனர்.
மதுரை: அலங்காநல்லூர் அருகே ஆதனூரில் விசிக கொடிக்கம்பம் அருகே கூடுதல் கட்டிடம் கட்டக்கூடாது என்ற வருவாய்த் துறை நோட்டீஸை கண்டித்து அக்கட்சியினர் போராட்டம் செய்தனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகிலுள்ள ஆதனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடி, கொடி மேடை,கட்சி விளம்பர பலகை கடந்த 25 ஆண்டாக இருக்கிறது. தற்போது அவ்விடத்தில் கொடிக்கம்பத்தை சுற்றிலும் கூடுதல் கட்டிடம் கட்ட அக்கட்சியினர் முயற்சித்தனர். இதற்கு வருவாய்த் துறையினர் எதிர்ப்பு தெரிவித்து, கிராம மந்தைப்புறம்போக்கு இடத்தில் கூடுதல் கட்டிடம் கட்டக்கூடாது என தெரிவித்தனர்.