முல்லை பெரியாறு பிரச்சினைக்கு சுமுக தீர்வு: முதல்வருக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் வலியுறுத்தல்
கேரளா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து முல்லை பெரியாறு பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை: கேரளா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து முல்லை பெரியாறு பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம்: முல்லை பெரியாறு அணையில் வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரள அரசு தொடர்ந்து அனுமதி மறுக்கிறது. தற்போதும் முல்லை பெரியாறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட தளவாட பொருட்களை கேரள வனத் துறையினர் அனுமதிக்கவில்லை. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல்.