“ஆட்சியில் பங்கு என்று விஜய் கூறுவது அரசியல் கட்சிகளை திசை திருப்பவே...” - கே.பி.முனுசாமி விமர்சனம்

“அரசியல் கட்சிகளை திசை திருப்பவே ஆட்சியில் பங்கு என்று தவெக தலைவர் விஜய் சொல்லியிருக்கலாம்,” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

“ஆட்சியில் பங்கு என்று விஜய் கூறுவது அரசியல் கட்சிகளை திசை திருப்பவே...” - கே.பி.முனுசாமி விமர்சனம்

திருவண்ணாமலை: “அரசியல் கட்சிகளை திசை திருப்பவே ஆட்சியில் பங்கு என்று தவெக தலைவர் விஜய் சொல்லியிருக்கலாம்,” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் அதிமுக பணிகளை இன்று (நவ.19) கள ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி உத்தரவின்பேரில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவின் பணிகளை கள ஆய்வு செய்துள்ளோம். அரசு பணத்தில் முதல்வர் ஸ்டாலின் தனது தந்தைக்கு விழா எடுத்து வருகிறார். மேலும் தேவையில்லாத இடங்களில் கட்டிடம் கட்டி, அவருடைய பெயரை வைத்து வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சியின் 4 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரி கொண்டு வந்து, அடிக்கல் நாட்டி ரூ.400 கோடி செலவு செய்யவில்லை. தந்தையின் நினைவிடத்தில் பல நூறு கோடி செலவு செய்து விழா எடுத்தார். பல இடங்களில் கட்டிடம் கட்டி, அவரது தந்தையின் திருவுருவ சிலையை வைத்து விழா எடுத்து வருகிறார். இப்படிதான் அரசு பணம், மக்களின் வரிப்பணம் விரயமாகிறது.