மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியை கடந்தது: நீர்வளத்துறை மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு
மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 எட்டவுள்ள நிலையில் நீர்வளத்துறை மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் இன்று காலை ஆய்வு செய்தார்.
மேட்டூர்: மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 எட்டவுள்ள நிலையில் நீர்வளத்துறை மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் இன்று காலை ஆய்வு செய்தார்.
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சீராக உயர்ந்து வந்தது. ஃபெஞ்சல் புயல் காரணமாக, காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாகவும், தொப்பையாறு அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 32,240 கன அடியாகவும், நேற்று 25,098 கன அடியாகவும் இருந்த நிலையில் இன்று 14,404 கன அடியாக சரிந்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.