வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில் 6.85 லட்சம் பேர் விண்ணப்பம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம்,, திருத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் வாயிலாக 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம்,, திருத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் வாயிலாக 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 1.1.2025-ஐ தகுதி நாளாகக் கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025-க்கான சிறப்பு முகாம்கள் நவம்பர் 16 மற்றும் 17-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) தமிழகம் முழுவதும் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நடைபெற்றன. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், திருத்தம், இடமாற்றம், ஆதார் எண் இணைப்பு தொடர்பாக முதல் நாளில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 34 பேர், இரண்டாவது நாளில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 479 பேர் என மொத்தம் 6 லட்சத்து 85 ஆயிரத்து 513 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.