வெள்ள பாதிப்புக்கு ரூ.2000 நிவாரணம்; வீடுகளை பெருக்கி துடைப்பதற்கு கூட போதாது: அன்புமணி விமர்சனம்
தமிழக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரேஷன் அட்டைக்கு ரூ. 2,000 வழங்கியிருப்பது ஆணவமான செயல். சேதம் அடைந்துள்ள வீடுகளை பெருக்கி துடைப்பதற்கு கூட இந்த 2,000 ரூபாய் போதாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
கடலூர்: தமிழக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரேஷன் அட்டைக்கு ரூ.2,000 வழங்கியிருப்பது ஆணவமான செயல். சேதம் அடைந்துள்ள வீடுகளை பெருக்கி துடைப்பதற்கு கூட இந்த 2,000 ரூபாய் போதாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் மற்றும் தென்பெண்ணையாற்று வெள்ளம் காரணமாக கடலூர் ஒன்றிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பு மையத்தில் தங்க வைத்து மருத்துவ முகாம், உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறது.