திமுக தொண்டர்களே வெறுக்கும் வகையில் இந்த ஆட்சி நடக்கிறது: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ராஜபாளையத்தில் அதிமுக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பயணம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

திமுக தொண்டர்களே வெறுக்கும் வகையில் இந்த ஆட்சி நடக்கிறது: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ராஜபாளையம்: திமுக தொண்டர்களே வெறுக்கும் வகையில் இந்த ஆட்சி நடக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

ராஜபாளையத்தில் அதிமுக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பயணம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் வகித்தார். இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் முத்துராஜ் வரவேற்றார்.