அதிகாரிகள் மீது லாரியை ஏற்ற முயற்சி - திருட்டு மணல் ஏற்றி வந்த கும்பல் அராஜகம்
திருட்டு மணல் ஏற்றி வந்த கும்பல் லாரியை வருவாய்த்துறை அதிகாரிகள் மீது மோத முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, வருவாய்த்துறையினர் 26 கி.மீ. 1.45 மணி நேரம் ஜீப்பில் துரத்திச் சென்று லாரியை பிடித்தனர்.
கும்பகோணம்: திருட்டு மணல் ஏற்றி வந்த கும்பல் லாரியை வருவாய்த்துறை அதிகாரிகள் மீது மோத முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, வருவாய்த்துறையினர் 26 கி.மீ. 1.45 மணி நேரம் ஜீப்பில் துரத்திச் சென்று லாரியை பிடித்தனர்.
பாபநாசம் வட்டம், ராராமுத்திரைக்கோட்டை உள்பட 10 கிராமங்களில் உள்ள பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா பெறுபவர்களை ஆய்வு மேற்கொள்ள, பாபநாசம் வட்டாட்சியர் செந்தில்குமார், துணை வட்டாட்சியர் பிரபு, வருவாய் அலுவலர் கமலி, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் அரசுக்கு சொந்தமான ஜீப்பில் சென்றனர். ஜீப்பின் ஓட்டுநராக கணேஷ் இருந்தார்.