ஹெச்.ராஜாவின் பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு
பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் பாஸ்போர்டை புதுப்பித்து தர உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை: பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் பாஸ்போர்டை புதுப்பித்து தர உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: “எனது பாஸ்போர்ட் செல்லுபடியாகும் தேதி முடியும் தருவாயில், அதை புதுப்பிக்க கோரி மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். ஆனால் எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்த அதிகாரிகள், எனக்கு விளக்கம் கேட்டு கடந்த பிப்ரவரி 2 ம் தேதி நோட்டீஸ் அனுப்பினர்.