2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் - திருவண்ணாமலையில் ‘அரோகரா’ முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சியில், பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் இன்று (டிசம்பர் 13-ம் தேதி) மாலை மகா தீபம் ஏற்றப்பட்டன.

2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் - திருவண்ணாமலையில் ‘அரோகரா’ முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள திருஅண்ணாமலை உச்சியில், பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் இன்று (டிச.13) மாலை மகா தீபம் ஏற்றப்பட்டன.

ஞான தபோதனரை வாவென்றழைக்கும் திருவண்ணாமலையின் சிறப்பு என்பது கார்த்திகைத் தீபத் திருவிழா ஆகும். உலக பிரசித்தி பெற்றது. இவ்விழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. பிடாரி அம்மன், விநாயகர் உற்சவங்கள் அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்றது.