4 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு: சாத்தனூர் அணை ஆய்வு புள்ளி விவரங்கள் கூறுவது என்ன?
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1958-ல் கட்டப்பட்ட சாத்தனூர் அணை, 119 அடி உயரம் கொண்டது
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1958-ல் கட்டப்பட்ட சாத்தனூர் அணை, 119 அடி உயரம் கொண்டது. தமிழகத்தின் முக்கியமான அணைகளில் ஒன்றான இந்த அணை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் விவசாயத்துக்கான முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது.
கடந்த நவ. 30-ம் தேதி ஃபெஞ்சல் புயல்காரணமாக தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. டிச. 1-ம் தேதி காலை விநாடிக்கு 5,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நள்ளிரவு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்தது. மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு 1.68 லட்சம் கனஅடியாக நீர்வரத்து உயர்ந்தது. இதனால், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 119 அடியை நெருங்கியது.