5 ரூபாய் முதல் 50 லட்சம் வரை... - தபேலா மேதை ஜாகிர் ஹுசைனின் ஈடில்லா இசைப் பயணம்!

கடந்த 1951-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மகாராஷ்டிர தலைநகர் மும்​பை​யில் ஜாகிர் ஹுசைன் பிறந்​தார். அவரது தந்தை அல்லா ராக்கா. இவர் பிரபல தபேலா இசைக் கலைஞர் ஆவார். பிறவி மேதையான ஜாகிர் ஹுசைன் 5 வயதிலேயே தபேலா வாசிக்க தொடங்​கினார். தந்தை​யுடன் சேர்ந்து பல்வேறு இசைக்​கச்​சேரி​களில் பங்கேற்​றார்.

5 ரூபாய் முதல் 50 லட்சம் வரை... - தபேலா மேதை ஜாகிர் ஹுசைனின் ஈடில்லா இசைப் பயணம்!

சான் பிரான்சிஸ்கோ: கடந்த 1951-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மகாராஷ்டிர தலைநகர் மும்​பை​யில் ஜாகிர் ஹுசைன் பிறந்​தார். அவரது தந்தை அல்லா ராக்கா. இவர் பிரபல தபேலா இசைக் கலைஞர் ஆவார். பிறவி மேதையான ஜாகிர் ஹுசைன் 5 வயதிலேயே தபேலா வாசிக்க தொடங்​கினார். தந்தை​யுடன் சேர்ந்து பல்வேறு இசைக்​கச்​சேரி​களில் பங்கேற்​றார்.

தன்னுடைய 11 வயது வயதில் அமெரிக்​கா​வில் தனியாக இசைக் கச்சேரி நடத்​தினார். அப்போது​முதல் அவரது இசை பயணம் தொடங்​கியது. கடந்த 1973-ம் ஆண்டில் ‘லிவ்​விங் இன் தி மெட்​டீரியல் வோர்ல்டு' என்ற பெயரில் தனது முதல் இசை ஆல்பத்தை அவர் வெளி​யிட்​டார். அடுத்​தடுத்து அவரது பல்வேறு இசை ஆல்பங்கள் வெளி​யாகி இசை உலகில் பெரும் வரவேற்பை பெற்​றன.