6 நாட்களில் ரூ.1,000 கோடி வசூலை எட்டிய அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 6 நாட்களில் ரூ.1000 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 6 நாட்களில் ரூ.1000 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் மட்டும் 5 நாட்களில் ரூ.375 கோடியை வசூலித்துள்ளது. இந்தியில் அதிவேகமாக ரூ.300 கோடி வசூலை எட்டிய படம் என்ற சாதனையை படைத்துள்ளது. ரூ.300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் வெளியான 6 நாட்களில் ரூ.1002 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேகமாக ரூ.1000 கோடியை வசூலித்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. தெலுங்கு சினிமாவின் அதிகபட்ச வசூலான ராஜமவுலியின் ‘பாகுபலி 2’ படத்தின் ரூ.1700 கோடி வசூல் சாதனையை ‘புஷ்பா 2’ நெருங்கும் என திரை வர்த்தகர்கள் கணிக்கின்றனர்.