8 மாவட்டங்களில் மாவட்ட தலைவர் பதவி காலி - இதுதான் தமிழக காங்கிரஸின் நிலை!
ராமநாதபுரம், திருநெல்வேலி, திண்டுக்கல், சென்னையில் 2 மாவட்டங்கள் என மொத்தம் 8 மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவி இப்போது காலியாக உள்ளது. இந்த மாவட்டங்களுக்கெல்லாம் பொறுப்புக் குழுவை நியமித்து பொழுதைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
“காமராஜர் ஆட்சியை நோக்கித்தான் இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. ஆனால், தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மாவட்ட தலைவர்களையே நியமிக்க முடியாத நிலையை வைத்துக் கொண்டு என்ன தைரியத்தில் அவர் இப்படிச் சொல்கிறார் என்று தெரியவில்லை.
ராமநாதபுரம், திருநெல்வேலி, திண்டுக்கல், சென்னையில் 2 மாவட்டங்கள் என மொத்தம் 8 மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவி இப்போது காலியாக உள்ளது. இந்த மாவட்டங்களுக்கெல்லாம் பொறுப்புக் குழுவை நியமித்து பொழுதைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால், பொறுப்புக் குழுக்குள்ளேயே யார் பெரியவர் என்ற ஈகோ யுத்தம் பஞ்சமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. இதனால், யாருக்குப் பின்னால் செல்வது என்று புரியாமல், இருக்கும் கொஞ்ச நஞ்ச காங்கிரஸ்காரர்களும் குழம்பிப்போய் நிற்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கல்வி நிறுவனங்களின் நிர்வாகி செல்லத்துரை அப்துல்லா, தனக்கு இந்தப் பதவி வேண்டாம் என்று சொல்லி 2022-ல் நாசூக்காக ஒதுங்கிக் கொண்டார்.