Baby John விமர்சனம்: தெறிக்க விட்டதா ‘தெறி’ ரீமேக்?

’ராஜா ராணி’ என்ற தனது ரொமான்டிக் படத்தை கொடுத்த அட்லீ, இரண்டாவது படத்திலேயே விஜய்யை வைத்து தன்னை தமிழின் தவிர்க்க முடியாத இயக்குநராக தடம் பதித்த படம் ‘தெறி’. விஜய்யின் கரியரில் முக்கியமான படங்களில் ஒன்றாக இதனை தற்போது இந்தியில் தயாரித்துள்ளார் அட்லீ. 

Baby John விமர்சனம்: தெறிக்க விட்டதா ‘தெறி’ ரீமேக்?

’ராஜா ராணி’ என்ற தனது ரொமான்டிக் படத்தை கொடுத்த அட்லீ, இரண்டாவது படத்திலேயே விஜய்யை வைத்து தன்னை தமிழின் தவிர்க்க முடியாத இயக்குநராக தடம் பதித்த படம் ‘தெறி’. விஜய்யின் கரியரில் முக்கியமான படங்களில் ஒன்றான இதனை தற்போது இந்தியில் தயாரித்துள்ளார் அட்லீ.

கேரளாவில் தனது 5 வயது மகளுடன் பேக்கரி ஒன்றை நடத்தி அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஜான் டி சில்வா என்னும் பேபி ஜான் (வருண் தவன்). எந்த வம்புக்கும் போகாமல் வாழும் அவருக்கு எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சினை வந்து சேர்கிறது. தான் யார் என்பதை தனது மகளின் பள்ளி ஆசிரியையிடம் (வாமிகா) சொல்லத் தொடங்குகிறார். இன்னொரு புறம் இவரை கொல்வதற்காக வெறியுடன் காத்துக் கொண்டிருக்கும் வில்லன் நானாஜிக்கும் (ஜாக்கி ஷெரோஃப்) பேபி ஜானுக்கு என்ன பகை? இதற்கெல்லாம் பதில் சொல்கிறது படம்.