ஜெய்ப்பூரில் ‘கூலி’ படப்பிடிப்பின்போது 74-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் தனது 74-வது பிறந்தநாளை, ஜெய்ப்பூரில் நடக்கும் கூலி படப்பிடிப்பில் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு முதல்வர், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

‘கூலி’ படத்தின் படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கு படக்குழுவினருடன் சேர்ந்து கேக் வெட்டி தனது 74-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்தநாளையொட்டி வழக்கம்போல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு ரசிகர்கள் பலர் வருகை தந்து வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் லதா ரஜினிகாந்தின் அறிவுறுத்தலின்பேரில், இல்லத்துக்கு வருகை தந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.