ஃபெஞ்சல் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் சனிக்கிழமை பள்ளி விடுமுறை?

ஃபெஞ்சல் புயல் சனிக்கிழமை காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுச்சேரிக்கு அருகில் பிற்பகல் புயலாக கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து, சென்னை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் சனிக்கிழமை பள்ளி விடுமுறை?

சென்னை: ஃபெஞ்சல் புயல் சனிக்கிழமை காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுச்சேரிக்கு அருகில் பிற்பகல் புயலாக கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் நாளை கரையை கடப்பதால் பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல சென்னை ஓஎம்ஆர், இசிஆர் சாலைகளில் நாளை பொதுப்போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. ஐடி நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.