ஃபெஞ்சல் புயல்: புதுச்சேரியில் காற்றுடன் பலத்த மழை; மீட்புப் பணியில் 5,000 பேர் தீவிரம்

வங்கக்​கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்​சல்’ புயலாக வலுப்​பெற்றுள்ள நிலையில், இன்று இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயலை எதிர்கொள்ள 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர். ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஃபெஞ்சல் புயல்: புதுச்சேரியில் காற்றுடன் பலத்த மழை; மீட்புப் பணியில் 5,000 பேர் தீவிரம்

புதுச்சேரி: வங்கக்​கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்​சல்’ புயலாக வலுப்​பெற்றுள்ள நிலையில், இன்று இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயலை எதிர்கொள்ள 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர். ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புயல் காரணமாக புதுச்சேரியில் இன்று காலை முதல் காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்றின் தாக்கத்தால், நகரின் ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. இவற்றை தீயணைப்பு மற்றும் பொதுப்பணித்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.