அஜித் படத்தை இயக்க முடியாமல் போனது ஏன்? - விக்னேஷ் சிவன் விளக்கம்
“நடிகர் அஜித்துக்காக நான் எழுதிய ஸ்கிரிப்ட் கிட்டத்தட்ட ‘ஆவேஷம்’ படத்தை போன்றது. ஆனால் அதனை தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்” என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: “நடிகர் அஜித்துக்காக நான் எழுதிய ஸ்கிரிப்ட் கிட்டத்தட்ட ‘ஆவேஷம்’ படத்தை போன்றது. ஆனால், அதனை தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்” என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “அஜித்துக்கு ‘நானும் ரவுடி தான்’ படம் மிகவும் பிடித்திருந்தது. அவரை நான் சந்தித்தபோது, ‘நான் நிறைய படங்களை பார்ப்பதில்லை. ஆனால் ‘நானும் ரவுடிதான்’ படத்தை நிறைய முறை பார்த்திருக்கிறேன். குறிப்பாக பார்த்திபன் கதாபாத்திரம் நன்றாக இருந்தது. அப்படியான ஒரு கதாபாத்திரத்தை வைத்து ஒரு ஸ்கிரிப்டை கொண்டு வாருங்கள் நாம் படம் பண்ணுவோம்’ என்றார். பின்னர் சொன்னபடியே ஒருநாள் அவர் என்னை தொடர்பு கொண்டு உங்கள் ஸ்டைலில் ஒரு படம் பண்ணலாம் என்றார்.