அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஓபிஎஸ் தரிசனம்
சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று( ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.
அதிமுகவை ஒருங்கிணைப்பது, கூட்டணி குறித்து மூத்த நிர்வாகிகள் இடையே பல்வேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில் சென்னையில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.