ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமானது: தமிழகத்தில் எப்போது மழை?
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
சென்னை: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டி நிலவி வருகிறது. இது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு தெற்கே 450 கிமீ தொலைவிலும், சென்னைக்கு வடகிழக்கே 370 கிமீ தொலைவிலும் உள்ளது.