இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு 8 வார அவகாசம் கோரிய மனு தள்ளுபடி

இரட்டை இலை சின்னம் தொடர்பான புகாரை பரிசீலித்து முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு மேலும் 8 வாரம் காலஅவகாசம் வழங்க வேண்டும் எனக்கோரி திண்டுக்கல் சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு 8 வார அவகாசம் கோரிய மனு தள்ளுபடி

சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பான புகாரை பரிசீலித்து முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு மேலும் 8 வாரம் காலஅவகாசம் வழங்க வேண்டும் எனக்கோரி திண்டுக்கல் சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும்வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனு மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.