உதவி செயற்பொறியாளரின் இடைநீக்கத்தை ரத்து செய்த சிஎம்டிஏ உறுப்பினர் செயலருக்கு ரூ.25,000 அபராதம்

உதவி செயற்பொறியாளரின் இடைநீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அதற்கு விளக்கமளிக்காமல் இடை நீக்கத்தை ரத்து செய்த சிஎம்டிஏ உறுப்பினர் செயலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

உதவி செயற்பொறியாளரின் இடைநீக்கத்தை ரத்து செய்த சிஎம்டிஏ உறுப்பினர் செயலருக்கு ரூ.25,000 அபராதம்

சென்னை: உதவி செயற்பொறியாளரின் இடைநீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அதற்கு விளக்கமளிக்காமல் இடை நீக்கத்தை ரத்து செய்த சிஎம்டிஏ உறுப்பினர் செயலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (சிஎம்டிஏ) கடந்த 2012-ம் ஆண்டு உதவிப் பொறியாளராக பணியில் சேர்ந்த செல்வ நாயகத்துக்கு, கடந்தாண்டு உதவி செயற்பொறியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து செல்வநாயகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடையுத்தரவு பெற்றதால், இடைநீக்கத்தை உறுப்பினர் செயலரும் ரத்து செய்தார்.