எக்ஸ் தளத்திலிருந்து வெளியேறிய விக்னேஷ் சிவன்: பின்னணி என்ன?

இயக்குநர் விக்னேஷ் சிவன் அண்மையில் எக்ஸ் தளத்திலிருந்து வெளியேறினார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எக்ஸ் தளத்திலிருந்து வெளியேறிய விக்னேஷ் சிவன்: பின்னணி என்ன?

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் அண்மையில் எக்ஸ் தளத்திலிருந்து வெளியேறினார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

நயன்தாராவின் திருமண ஆவணப்படம் வெளியானதிலிருந்து இணையத்தில் பல்வேறு கிண்டல்களுக்கு ஆளானார் விக்னேஷ் சிவன். தனுஷ் தொடர்ந்த வழக்கிற்கு தனது எதிர்வினை சர்ச்சையானதைத் தொடர்ந்து, அப்பதிவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார். அதற்குப் பிறகு ‘நானும் ரவுடிதான்’ படத்தினை முன்வைத்து பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். இதைத் தாண்டி தனியார் யூடியூப் சேனல் ஒன்று ஏற்பாடு செய்த முன்னணி இயக்குநர்களின் பேட்டியில் கலந்து கொண்டார். இதன் மூலமும் கடுமையான கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார் விக்னேஷ் சிவன்.