ஒரே நாளில் 36.5 செ.மீ மழை: கோவில்பட்டியில் கண்மாய்கள் உடைப்பு, போக்குவரத்து துண்டிப்பு
கோவில்பட்டியில் 24 மணி நேரத்தில் 36.5 செ.மீ., மழை பெய்தது. இதனால், கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு பல்வேறு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் நிரம்பி மறுகால் பாய்கிறது.
கோவில்பட்டி: கோவில்பட்டியில் 24 மணி நேரத்தில் 36.5 செ.மீ., மழை பெய்தது. இதனால், கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு பல்வேறு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் நிரம்பி மறுகால் பாய்கிறது. கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. நேற்று காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கோவில்பட்டியில் மட்டும் 36.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. பழனியாண்டவர் கோயில் தெருவில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. வீடுகளில் சுமார் 3 அடி தண்ணீர் உள்ளே புகுந்தால் மின்சாதனங்கள் சேதமடைந்தன. வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினர்.