கடந்த 2023-24-ம் ஆண்டில் தமிழகத்தின் மொத்த மின்நுகர்வு 742 கோடி யூனிட்கள் அதிகரிப்பு
தமிழகத்தின் மொத்த மின்நுகர்வு கடந்த 2023-24-ம் ஆண்டில் 742 கோடி யூனிட் அதிகரித்துள்ளது.
சென்னை: தமிழகத்தின் மொத்த மின்நுகர்வு கடந்த 2023-24-ம் ஆண்டில் 742 கோடி யூனிட் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் வீடு, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் மின்விநியோகம் செய்யும் பணியை தமிழக மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் தினமும் சராசரியாக 30 கோடி யூனிட்மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த மின்நுகர்வு கடந்த ஏப்ரல் 30-ம் தேதி 45.43 கோடி யூனிட்டாக அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக உள்ளது.