கடற்கரை - செங்கை இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் 10 ரயில்களின் சேவை ரத்து

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்று (டிச.8) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் 10 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது

கடற்கரை - செங்கை இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் 10 ரயில்களின் சேவை ரத்து

சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்று (டிச.8) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் 10 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில், ரயில் பாதுகாப்பு இயக்கத்தைக் கருத்தில் கொண்டு, நவ.22-ம் தேதி முதல், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இருமார்க்கமாகவும் 14 மின்சார ரயில்களின் சேவை வார நாட்களில் மட்டும் ரத்து செய்யப்பட்டது.