பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீர் - பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகியதால் பலர் வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகினர்.இதையடுத்து, பலர் தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீர் - பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

சென்னை: பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகியதால் பலர் வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகினர். இதையடுத்து, பலர் தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், கன்டோன்மென்ட் பல்லாவரம் மோகனரங்கன் (42), காமராஜர் நகர் திருவேதி (56) ஆகியோர் உயிரிழந்தனர்.

நேற்று முன்தினம் நிலவரப்படி, தாம்பரம் அரசு மருத்துவமனையில் 36 பேர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேர், தனியார் மருத்துவமனையில் 6 பேர் சிகிச்சை பெற்றனர். நேற்று காலை, மேலும் 6 பேர், தாம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.