காரைக்கால் கோயில் நில மோசடி: நேர்மையான விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு
காரைக்காலில் கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த நில மோசடி விவகார விசாரணையில் எவ்வித தவறும் நடக்காமல் நேரமையான விசாரணை நடத்த ஆட்சியருக்கு ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவுறுத்தியுள்ளார்
புதுச்சேரி: காரைக்காலில் கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த நில மோசடி விவகார விசாரணையில் எவ்வித தவறும் நடக்காமல் நேரமையான விசாரணை நடத்த ஆட்சியருக்கு ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவுறுத்தியுள்ளார்.
காரைக்கால், கோவில் பத்து ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியாக விற்பனை செய்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், மாவட்ட முதன்மை காவல் கண்காணிப்பாளர் மணீஷ் ஆகியோரின் நேரடி பார்வையில் முதல் நிலை விசாரணை நடைபெற்றது. அதன் அடிப்படையில், மோசடியில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக மாவட்டத் துணை ஆட்சியர் (வருவாய்) ஜான்சன், துணை சர்வேயர் ரேணுகா தேவி மற்றும் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.