காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (திங்கள்கிழமை) காலை 8.30 மணியளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நவ.25) காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.