“கிரிக்கெட்டுக்கு சச்சின் போல சினிமாவுக்கு ஷங்கர்” - ராம்சரண் புகழாரம்
கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ சினிமாவுக்கு ஷங்கர் அப்படி. அவர் தான் நம்பர் ஒன் கமர்ஷியல் இயக்குநர் என்று இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரண் தெரிவித்தார்.
ஹைதராபாத்: கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ சினிமாவுக்கு ஷங்கர் அப்படி. அவர் தான் நம்பர் ஒன் கமர்ஷியல் இயக்குநர் என்று ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரண் தெரிவித்தார்.
ஷங்கர் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி அமெரிக்காவின் டல்லாஸ் நகரத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் ராம்சரண் பேசியதாவது: “நாங்கள் இந்தியாவிலேயே இருப்பது போன்ற உணர்வு இது. ஒருவேளை அதனால்தான் டல்லாஸ் இப்போது டல்லாஸ்புரம் என்று அழைக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். ஷங்கர் இயக்கும் படத்தில் நான் நடித்ததை என்னால் நம்ப முடியவில்லை. அவர் படத்தில் நடிப்பது என்பது என்னுடைய கனவு. நான் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இது ஒரு அழகான பயணம். கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ சினிமாவுக்கு ஷங்கர். அவர் தான் நம்பர் ஒன் கமர்ஷியல் இயக்குநர். கடந்த 5 ஆண்டுகளில் இது என்னுடைய முதல் தனி திரைப்படம்” இவ்வாறு ராம்சரண் தெரிவித்தார்.